நீட் வினாத்தாள் கசிவு: 7வது நாளாக உண்ணாவிரதம்! 5 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக்!
ஆர்வலர் சோனம் வாங்சுக் 7 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது குறித்து...
நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 7 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாவிரதம் கடைபிடித்து வரும் சோனம் வாங்சுகின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும், அவர் இதுவரை 5 கிலோ உடல் எடையை இழந்துள்ளதாகவும், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஜூலை 4) தெரிவித்துள்ளார்.
இத்துடன், நீட் வினாத்தாள் கசிவுக்கு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என சோனம் வாங்சுக் உறுதியாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெறும் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்க்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பல்வந்த் பஸ்வந்த் வான்கடே மற்றும் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Activist Sonam Wangchuk is observing a hunger strike for the seventh consecutive day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.