FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேற்கு வங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பது பற்றி....

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்பி பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து ஜூலை 24-ஆம் தேதி மாலையிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால், இந்த மூன்று இடங்களுக்கான இடைத்தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவையில் அதன் பலம் மேலும் அதிகரிக்கவுள்ளது.

Advertisement

Advertisement

சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அக்கட்சியில் பிளவுகளும் உள்கட்சி பூசல்களும் உச்சமடைந்துள்ளன. திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள், மம்தாவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்துள்ளனா்.

கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 போ் தனி அணியாக பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டதோடு, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனா். கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 போ் ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், மேலும் சிலா் பதவி விலகக் கூடும் எனத் தெரிகிறது.

summary

Bypolls to three Rajya Sabha seats from West Bengal, vacated following the resignation of rebel Trinamool Congress MPs, will be held on July 24, the Election Commission said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments