முகப்பு
இந்தியா

திரிபுரா பள்ளிகளில் "வந்தே மாதரத்துடன்" தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: முதல்வர்

திரிபுரா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தேசியப் பாடலுடன், தேசிய கீதம் பாடுவது பற்றி..

Updated On : 7 ஜூலை 2026, 4:07 pm IST
மாணிக் சாஹா - file photo
பகிர்:

திரிபுரா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-இன் முழு வடிவத்துடன், தேசிய கீதமான 'ஜன-கண மன' உடன் சேர்த்து பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்தார்.

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை, கண்ணியம், அதன் அதிகாரப்பூர்வ வடிவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக முதல்வர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பெருமித உணரவை வளர்ப்பதற்கும், தேசிய பாடலுடன் தொடர்புடைய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் கல்விசார் நிகழ்வுகளிலும் முறையான நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்..

Advertisement

Advertisement

தேசிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தும், இளைஞர்களிடையே தேசியச் சின்னங்கள் மீது மரியாதையை வளர்க்கும் நோக்கில், மாநில நிர்வாக எல்லைக்குள் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் (அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத மதரஸாக்கள் உள்பட) ஆகியவற்றில் இந்த வழிகாட்டுதல்களைச் சீராக அமல்படுத்தக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது

எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-இன் முழு வடிவத்தைப் பாடுவதன் மூலம் முறையாகத் தொடங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து தேசிய கீதமான 'ஜன-கண-மன' பாடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜூன் 25 அன்று நடைபெற்ற திரிபுரா அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tripura Chief Minister Manik Saha on Tuesday said the School Education department has made the singing of the full version of the national song 'Vande Mataram', along with the national anthem 'Jana-Gana-Mana', compulsory in all schools of the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments