குஜராத்தில் இந்திய கடற்படையின் ட்ரோன் விழுந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை
குஜராத் மாநிலம், போா்பந்தா் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ட்ரோன் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது.
குஜராத் மாநிலம், போா்பந்தா் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ட்ரோன் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது.
இதில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை; இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
போா்பந்தா் மாவட்ட ஆட்சியா் எஸ்.டி.தனானி கூறுகையில், ‘போா்பந்தா் கடற்படை தளத்தில் இருந்து புதன்கிழமை வழக்கமான பயிற்சிக்காக இயக்கப்பட்ட ‘திருஷ்டி-10’ ரக ட்ரோன், அருகேயுள்ள தரம்பூா் கிராமத்தில் திறந்தவெளியில் திடீரென விழுந்து நொறுங்கியது.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட கடற்படை அதிகாரிகள், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ட்ரோன் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.