ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி! போர் விமானங்கள் மூலம் வழியனுப்பிய இந்தோனேசியா!
இந்தோனேசியா பயணத்தை முடித்து புறப்பட்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு போர் விமானங்கள் மூலம் வழியனுப்பியது குறித்து...
இந்தோனேசியா பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு போர் விமானங்கள் மூலம் வழியனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜூலை 6 அன்று அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, இந்தோனேசியா வான் எல்லைக்குள் பிரதமர் மோடியின் விமானம் நுழைந்தவுடன் இந்தோனேசியாவின் போர் விமானங்களின் மூலம் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த 3 நாள் பயணத்தில், இந்தோனேசியா மற்றும் இந்தியா இடையில் பாதுகாப்பு, கடல்படை கூட்டுறவு, செய்யறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தோனேசியாவில் உள்ள பழமையான பிராமனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தனது 3 நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று (ஜூலை 8) பிற்பகல் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையம் வரை வந்து இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ வழியனுப்பினார்.
இதையடுத்து, ஜகார்தாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய எல்லையைக் கடக்கும் வரையில் அந்நாட்டின் 5 போர் விமானங்கள் உடன் வந்து வழியனுப்பியுள்ளது பெருமளவில் கவனம் பெற்றுள்ளது.
Indonesia provided a fighter jet escort to bid farewell to Prime Minister Narendra Modi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.