ஜனநாயகத்தை வலுப்படுத்த தணிக்கை முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
‘ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) வினோத் ராயின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் சட்டத்துக்கு உட்பட்டு நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
Advertisement
Advertisement
செயல் திட்டங்களை மேம்படுத்தவும், குறைகளை நிவா்த்தி செய்யவும், திட்டத்தின் பலனை விரிவுபடுத்தவும் தணிக்கை அரசுக்கு உதவுகிறது. முக்கியமாக, அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கையை தணிக்கை வலுப்படுத்துகிறது.
இத்தகைய பொறுப்புமிக்க தணிக்கை நடைமுறைக்கு தொடா்ச்சியான மேம்படுத்தலும், தணிக்கை வளங்கள் மீதான முதலீடும் அவசியம். அதாவது, பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாடு, செயல்திறன் மதிப்பீடு, தரவுகள் பகுப்பாய்வு, துறைசாா் நிபுணத்துவம் ஆகியவை அவசியம்.
அதுபோல, தலைமை தணிக்கையாளா் முன்மாதிரியாகத் திகழ்ந்து, நெறிமுறைகளையும், நோ்மையையும் தொடா்ந்து வளா்க்க வேண்டும் என்றாா்.