முகப்பு
திருப்பதி

திருமலையில் குடியரசு துணைத் தலைவா்

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு.

Updated On : 28 ஏப்ரல் 2026, 5:04 am IST
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு.
பகிர்:

இரண்டு நாள் பயணமாக திருமலைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேவஸ்தானம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருந்தினா் மாளிகையில் அவருக்கு அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடு பூங்கொத்து அளித்து வரவேற்றாா். தேவஸ்தான துணை செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோரும் வரவேற்றனா்.

அறங்காவலா் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, ஆட்சியா் டாக்டா் வெங்கடேஸ்வா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சுப்பராயுடு ஆகியோரும் உடனிருந்தனா். இரவு திருமலையில் தங்கும் அவா் செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement