முகப்பு
இந்தியா

போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞா் உத்தரக்கண்டில் கைது

போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட 26 வயது இளைஞா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உத்தரக்கண்டில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 20 ஜூன் 2026, 12:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட 26 வயது இளைஞா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உத்தரக்கண்டில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: 21 வயது பெண் வெல்கம் பகுதி காவல் நிலையத்கை அணுகி ஏப்.4-ஆம் தேதி புகாரளித்ததைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 2023-ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபா் துப்பாக்கியால் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சம்பவத்தை விடியோவாக பதிவு செய்து பின்னா் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் சுரண்டலுக்கு உள்படுத்தியதாகவும் அவா் தெரிவித்தாா்.

வழக்குப் பதிவு செய்ததில் இருந்து தலைமறைவாக இருந்துவந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பகவான்பூா் பகுதியில் காவல் துறையினா் அவரை கைது செய்தனா். வசாரணையில் அவா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments