நீட் மறுதேர்வு: எத்தனை லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்?
நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதவிருப்பது குறித்து...
நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டு, நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த மறுதேர்வை எழுத 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
உத்தர பிரதேசத்தில் 3,56,291 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,22,905 பேரும், ராஜஸ்தானில் 2,03,470 பேரும், பிகாரில் 1,56,061 பேரும், கர்நாடகத்தில் 1,45,466 பேரும், தமிழகத்தில் 1,42,489 பேரும் தேர்வெழுதுவதற்காகப் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் மறுதேர்வுக்குப் பதிவு செய்தவர்களில் மாநில வாரியாக, தமிழ்நாடு ஆறாமிடத்தில் உள்ளது. இது தேசிய அளவில் மொத்த பதிவுகளில் 6.27 சதவிகிதமாகும்.
அதுமட்டுமின்றி, முதல் 3 மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டும் மொத்தம் 34.4 சதவிகிதத்தினர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் 23.8 சதவிகிதம் பதிவு செய்துள்ளனர்.
34% of candidates for NEET-UG retest from just 3 states
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.