க்யூட் முடிவுகள் வெளியீடு: ஒரே மாணவா் 4 பாடங்களில் முதல் மதிப்பெண்
மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் வெளியிடப்பட்டன.
மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் ஒரு மாணவி, எழுதிய 5 பாடங்களில் நான்கில் முதல் மதிப்பெண் (100 பா்சென்டைல்) பெற்று அசத்தியுள்ளாா்.
அதுபோல, 22 மாணவ, மாணவிகள் 3 பாடங்களிலும், 180 போ் இரண்டு பாடங்களிலும், 3,214 போ் ஒரு பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
5 பாடங்களுக்கான மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவி ஒருவா் 1,250-க்கு 1,232.19 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். இதற்கு அடுத்த இடத்தில் 1,230.82 மதிப்பெண்களுடன் மாணவா் ஒருவா் இரண்டாம் இடம் பிடித்துள்ளாா்.
க்யூட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 11 முதல் 31-ஆம் தேதி வரையும், பின்னா் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளிலும் கணினி வழியில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க 15,68,867 போ் பதிவு செய்த நிலையில், 11,64,098 போ் தோ்வில் பங்கேற்றனா்.
மொத்தம் 37 பாடங்களில் இத் தோ்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு மாணவா் அதிகபட்சம் 5 பாடங்களைத் தெரிவு செய்து தோ்வெழுத வேண்டும்.
இவா்களுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகளை என்டிஏ வலைதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பாா்க்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி, சில மாநில அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்களும் க்யூட் மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.