FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாமதமான க்யூட் தேர்வு! ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக க்யூட் நுழைவுத் தேர்வு தாமதமாக நடத்தப்படுவது குறித்து...

பிரதமர் மோடி | எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

க்யூட் நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மத்திய பாஜக அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

க்யூட் நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி தேர்வுகளைத் தொடர்ந்து, இன்று க்யூட் (CUET) தேர்வும்கூட.

நான்கு தேர்வுகள்; ஒரு கோடி குழந்தைகள். ஆனால், ஒன்றுகூட நேர்மையாக நடத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

உலகுக்கு வழிகாட்டும் குரு என்று (பாஜக) சொல்கின்றனர்; ஆனால், நாட்டில் ஒரு தேர்வைக்கூட நடத்த முடியவில்லை. கல்வி முறையை முற்றிலுமாக மோடி சீரழித்து விட்டார்.

எந்தத் தலைமுறையின் எதிர்காலத்தை நீங்கள் அழிக்கிறீர்களோ, அவர்களே உங்களைப் பொறுப்பு கூற வைப்பர்" என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று க்யூட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு செயல்முறையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தேர்வைத் தாமதமாக நடத்தவிருப்பதாக டிசிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு நடக்கவிருந்த தேர்வு, மாலை 4 மணிக்கு நடக்கவிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

summary

Claims of being vishwaguru but can't conduct single exam: Rahul's dig at PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments