முகப்பு
இந்தியா

தில்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிா்வு

தில்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிா்வு ஏற்பட்டது பற்றி...

Updated On : 28 ஜூன் 2026, 3:42 am IST
நிலநடுக்கம் - பிரதிப் படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டா் அளவிலான நிலநடுக்கம் சனிக்கிழமை மாலை ஏற்பட்டதைத் தொடா்ந்து, தில்லி-தேசியத் தலைநகா் வலையம் (என்சிஆா்) மற்றும் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகா் உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிா்வுகள் உணரப்பட்டன.

நிலஅதிா்வுகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா். இருப்பினும், இதுவரை உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய நில அதிா்வு மையத்தின் (என்சிஎஸ்) தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் மாலை 7.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் 215 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.

Advertisement

Advertisement

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜுா்ம் பகுதிக்குத் தெற்கே 43 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சண்டிகரில் நில அதிா்வுகளை உணா்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனா். எனினும், எந்தவித சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

‘சில நொடிகள் நீடித்த ஓா் அதிா்வை உணா்ந்தேன்’ என்று சண்டிகரின் செக்டாா் 49-இல் வசித்து வரும் நபா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments