மாநிலங்களவையில் 8 புதிய எம்பிக்கள் பதவியேற்பு!
மாநிலங்களவைக்குத் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றது குறித்து..
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜக தலைவர் தருண் சுக் உள்ளிட்ட மாநிலங்களவைக்குத் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மல்லிகார்ஜுன கார்கே, ராதாகிருஷ்ணனின் அறையில் பதவியேற்ற நிலையில் , மற்ற ஏழு உறுப்பினர்களும் மாநிலங்களவை அவையிலேயே பதவியேற்றனர்.
கார்கே சுக் தவிர, மற்ற ஆறு புதிய உறுப்பினர்களில் ஜிதேந்திர மேக்ஜிபாய் கன்சாரியா, மான்சிங் மெராமன் பர்மார் (குஜராத்), எம். நாகராஜா (கர்நாடகம்), ராஜேந்திர ஹிராலால் ஜெயின் (மகாராஷ்டிரம்), அதிகாரிமயம் சாரதா தேவி (மணிப்பூர்), அல்கா சிங் (ராஜஸ்தான்) ஆகியோர் அடங்குவர்.
Advertisement
Advertisement
பதவியேற்பு நிகழ்வின்போது, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவையின் தலைவர் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் உடனிருந்தனர்.
கார்கே அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை கையில் ஏந்தியவாறு இந்தியில் பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்ததுடன், அவர்களை அவைக்கு வரவேற்றார்.
Eight newly-elected MPs of the Rajya Sabha, including Congress chief Mallikarjun Kharge and BJP leader Tarun Chugh, took oath as members of the Upper House on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.