முகப்பு
இந்தியா

2028 ஏப். 1 முதல் மின் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்!

மின் வாகனக் கொள்கைக்கு தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 4:54 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மின் வாகனக் கொள்கைக்கு தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி, தில்லியில் 2027 ஜனவரி 1 முதல் மின் ஆட்டோ - ரிக்ஷாக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்கள் பதிவு செய்யப்படாது.

அதேபோல பெட்ரோல், சிஎன்ஜி இரு சக்கர வாகனங்களுக்கு வருகிற 2028, ஏப். 1 முதல் அனுமதி இல்லை. அதாவது 2028 ஏப். 1 முதல் தில்லியில் மின் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.

Advertisement

Advertisement

தில்லியின் புதிய மின் வாகனக் கொள்கை வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

தில்லியின் புதிய மின்சார வாகனக் கொள்கை அமலுக்கு வந்த முதல் ஆண்டில், மின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 30,000 மானியமும், மின் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ. 50,000 மானியமும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவே, இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டாம் ஆண்டில் ரூ. 20,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ. 10,000 மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல ரூ. 30 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட அனைத்து மின்சார கார்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்படும் காற்று மாசில் 23% வாகனங்களால்தான் ஏற்படுகிறது. அதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைத்து மின் வாகனங்களை அதிகரிக்க இந்த புதிய கொள்கை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

இதற்காக ரூ. 15,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2030 மார்ச் 31 ஆம் தேதிக்குள் தில்லியில் காற்று மாசைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

summary

Delhi cabinet clears new EV policy: Only electric autos from 2027, e-two-wheelers from 2028

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments