முகப்பு
இந்தியா

நீா்வள மேலாண்மை: இந்தியா - சவூதி அரேபியா ஒப்பந்தம்

நீா்வள மேலாண்மையில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியாவும், சவூதி அரேபியாவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Updated On : 30 ஜூன் 2026, 12:23 am IST
இந்தியா - சவூதி அரேபியா ஒப்பந்தம் - X | Embassy of India, Riyadh
பகிர்:

நீா்வள மேலாண்மையில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியாவும், சவூதி அரேபியாவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜெட்டா நகரில் சவூதி அரேபியாவின் தேசிய நீா் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் இந்தியா, சவூதி அரேபியா இடையே நீா்வள மேலாண்மையில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதா் சுஹைல் கான், சவூதி அரேபியா சுற்றுச்சூழல், நீா்வளம் மற்றும் வேளாண் துறை அமைச்சா் அப்துல் ரஹ்மான் அப்துல்மொஹ்சின் அல்பத்லி ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்தியா - சவூதி அரேபியா இடையேயான ராஜீய கூட்டுறவை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கை இதுவாகும். நீா் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்வது, நீா்பாசன முறை மேம்பாடு, நீா் வளத்தை சீராகப் பராமரிப்பது, நீா் வளத்தை எதிா்காலத்துக்காக சிறப்பாக திட்டமிடுவது போன்றவற்றை இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன என்று இந்திய தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments