செஷல்ஸில் நவ விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
செஷல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டார்.
செஷல்ஸ் நாட்டுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, விக்டோரியா நகரின் குவின்சி வீதியில் பசுமை மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள நவசக்தி கோயிலுக்குச் சென்றார். செஷல்ஸ் ஹிந்து கோயில் சங்கத்தால் 1992-இல் இக்கோயில் கட்டப்பட்டது.
இதனிடையே, இன்று விக்டோரியா நகரில் நவசக்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் பிரதமர் மோடிக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து தெய்வங்களையும் பிரதமர் மோடி வணங்கி வழிபட்டார். பின்னர், கோயிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரை சந்தித்தார்.
Advertisement
Advertisement
அன்பான வரவேற்புகளுக்கு மத்தியில், செஷல்ஸ் மக்களின் பங்களிப்புகளை அங்கீகரித்த பிரதமர் மோடி, இந்தியாவையும் செஷல்ஸையும் இணைக்கும் வலுவான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை வலியுறுத்தினார்.
அந்நாட்டின் 50-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவருக்கு, அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி வழங்கி கௌரவித்தார்.
Continuing his high-profile three-day official visit to Seychelles, Prime Minister Narendra Modi on Monday visited the iconic Arul Mihu Navashakti Vinayakar Temple in Victoria, where he offered prayers for peace and global prosperity.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.