முகப்பு
இந்தியா

இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைக்கிறது! செஷல்ஸ் அவையில் மோடி உரை!

இரு நாடுகளையும் ஒருங்கிணைப்பதில் பாலம் போன்று இந்தியப் பெருங்கடல் செயல்படுவதாக பிரதமர் மோடி பேச்சு...

Updated On : 28 ஜூன் 2026, 7:15 pm IST
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ
பகிர்:

இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் இணைப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.

நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைப்பதில் இந்தியப் பெருங்கடல் பாலம் போன்று செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமைமுதல் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தில்லியில் இருந்து புறப்பட்டு விக்டோரியா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமா் மோடியை அதிபா் பேட்ரிக் மற்றும் உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனா். விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது தேசிய தின விழா திங்கள்கிழமை (ஜூன் 29) நடைபெறவுள்ளது. அதிபா் பேட்ரிக் அழைப்பின்பேரில், இந்த விழாவில் பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளாா்

இதனிடயே, தனது பயணத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார்.

அந்நாட்டு அவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையோடு உங்கள் முன்பு நிற்கிறேன். இதன்மூலம், 140 கோடி மக்களின் அன்பு நிறைந்த வாழ்த்துகளை இந்த அவைக்கு கொண்டுவந்துள்ளேன். பிரதமராக பதவியேற்ற பிறகு 2015 ஆம் ஆண்டு நான் சந்தித்த இந்தியப் பெருங்கடலில் உள்ள முதல் நாடு செஷல்ஸ்தான்.

summary

Indian Ocean does not separate India and Seychelles, it connects us PM Modi historic Seychelles address

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments