இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?
ஈரான் போரின் காரணமாக, இந்தியாவில் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்படுமாயின் ஆஸ்திரேலியா, கனடா வழங்க வாய்ப்பு
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவும் கனடாவும் எரிவாயு வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சுமார் 60 மில்லியன் எம்எம்எஸ்சிஎஸ்டி அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது.
இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் மோதல் அதிகரித்து வரும்நிலையில், எரிசக்தி ஆதாரங்களுக்காக பிற நாடுகளை இந்தியா ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
சர்வதேச எரிசக்தி நிறுவனம் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு ஆகியவற்றுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கப்பல்களுக்கான காப்பீட்டைப் பெறுவதற்காக அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்ஹியாவில் மொத்தம் 8 வாரங்களுக்கான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய இருப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தியா ஹார்முஸ் நீரிணை வழியாக வெறும் 40 சதவிகிதம் மட்டுமே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
India looking at alternative markets to buy gas; Australia, Canada offered to sell amid W Asia conflict: Sources
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.