இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
இனிமேல் பான் அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை மட்டும் போதாது என்பது குறித்து...
வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் அட்டை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை மட்டும் போதாது என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண்ணெழுத்து கொண்ட பான் அட்டையை இதுவரை ஆதார் அடையாள அட்டையை மட்டும் வைத்தே விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது.
இதனையடுத்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 31 வரை மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டையுடன் பிறந்த தேதியை உறுதி செய்வதற்காக கீழ்க்காணும் ஏதேனும் ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஏப்ரல் 1 முதல் பான் அட்டையை விண்ணப்பிக்க தேவைப்படும் துணை ஆவணங்கள்:
1. பிறப்புச் சான்றிதழ்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. கடவுச்சீட்டு
4. ஓட்டுநர் உரிமம்
5. பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்விச் சான்றிதழ்
பான் அட்டையானது நிதி பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் வருமான வரித் தாக்கல் போன்ற நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாய ஆவணமாக உள்ளது.
இந்த நிலையில், ஆதார் அட்டைகளில் பிறந்த தேதி தொடர்பான சிக்கல்கள் இருப்பதால், அதை சரிசெய்யும் நோக்கில் பிறந்த தேதியினை உறுதி செய்யும் மற்றோர் ஆவணம் தேவைப்படுவது, இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றது.
மேலும், ஏப்ரல் 1 முதல் பான் அட்டையை விண்ணப்பிப்பதற்கு பழைய விண்ணப்பப் படிவம் செல்லாது எனவும் புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
The central government has issued a notification stating that Aadhaar identity card alone will not be sufficient to obtain a PAN card from April 1.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.