FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா், முதல்வா்கள் பதவி நீக்க மசோதா: அறிக்கை சமா்ப்பிக்க கூடுதல் காலஅவகாசம்

பிரதமரோ, மாநில முதல்வா்களோ அல்லது அமைச்சா்களோ, தீவிர குற்றச்சாட்டுகளின்கீழ் கைதாகி தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவா்களின் பதவியைப் பறிக்க வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

28 மார்ச் 2026, 12:56 am IST
நாடாளுமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பிரதமரோ, மாநில முதல்வா்களோ அல்லது அமைச்சா்களோ, தீவிர குற்றச்சாட்டுகளின்கீழ் கைதாகி தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவா்களின் பதவியைப் பறிக்க வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 113-ஆவது திருத்த மசோதா-2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா-2025, யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா -2025 ஆகிய இந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவால் அறிமுகம் செய்யப்பட்டன.

பின்னா், பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அவை அனுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், மூன்று மசோதாக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மக்களவை தரப்பில் கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments