முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

அஸ்ஸாம் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

ஹிமந்த பிஸ்வா சர்மா - DPS
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் ஆகியோர் ஜலுக்பாரி மற்றும் ஜோர்ஹாட் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியின் தலைவர் லுரின்ஜோதி கோகோய், கோவாங் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த, காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர்களான பிரத்யுத் போர்டோலாய், பூபென் போரா ஆகியோர் திஸ்பூர் மற்றும் பிஹ்பூரியா தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

Advertisement

தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் கட்சியான பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. மற்ற கட்சிகளின் தேர்தல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.