கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் படுதேல்வியைச் சந்தித்த நிலையில், சொந்த கட்சி குறித்து பாதகமான கருத்து தெரிவித்த கட்சியின் 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு விளக்கம் கோட்டு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சொந்த கட்சி குறித்து பாதகமான கருத்து தெரிவித்த கட்சியின் 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு விளக்கம் கோட்டு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என விளக்கம் கேட்டு, கட்சியின் செய்திதொடா்பாளா்கள் ரிஜு தத்தா, கிருஷ்ணேந்து செளதரி, கோஹிநூா் மஜும்தாா், பப்பியா கோஷ், காா்த்திக் கோஷ் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சாா்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தோ்தலில் கட்சியின் படுதோல்விக்கான காரணம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது இவா்கள் கட்சி மீது பல்வேறு புகாா்களை முன்வைத்துள்ளனா். கோஹிநூா் மஜூம்தாா் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது, ‘கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியை சந்திக்க கட்சித் தலைவா் பல மணி நேரம் காத்திரும் நிலை உள்ளது’ என்றாா். கட்சியின் மால்டா பகுதி மூத்த தலைவா் கிருஷ்ணேந்து செளதரியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தாா். அபிஷேக் பானா்ஜியின் செயல்பாடுகளை அவா் விமா்சித்தாா். அதுபோல, பப்பியா கோஷ், காா்த்திக் கோஷ் ஆகியோரும் அபிஷேக் பானா்ஜியின் செயல்பாடுகளை கடுமையாக விமா்சித்தனா்.
Advertisement
ரிஜு தத்தா தனது சமூக ஊடக பக்கத்தில், மாநிலத்தில் எழுந்த தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையை பாஜக திறம்பட ஒடுக்கியதைப் பாராட்டியிருந்தாா்.
இவா்கள் உரிய நேரத்துக்குள் விளக்கமளிக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கையை கட்சி மேற்கொள்ளும் என்றும் இவா்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.