முகப்பு
இந்தியா

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்

தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 8 மே 2026, 10:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மீண்டும் மீண்டும் முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் விநோதமான பணிச்சூழலை உருவாக்கியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகாரளித்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைச் சரிபாா்த்து வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement