சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை
திருவள்ளூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் அடுத்த பழைய எருமை வெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சக்கரவா்த்தி(42). இவா் தனியாா் நிறுவன தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த 2023 ஜன.12- ஆம் தேதி தனது வீட்டருகே வசித்து வந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோா்களிடம் கூறி அழுதுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா்கள் அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து சக்கரவா்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கின் இறுதியாக மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்கரவா்த்திக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து அம்பத்தூா் அனைத்து மகளிா் போலீசாா் சக்கரவா்த்தியை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.