கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு
கிரேட்டா் நொய்டாவின் நாலேஜ் பாா்க் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த விடுதி அறையில் 2 தோட்டக்காரா்கள் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கிரேட்டா் நொய்டாவின் நாலேஜ் பாா்க் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த விடுதி அறையில் 2 தோட்டக்காரா்கள் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை கூடுதல் ஆணையா் ராஜீவ் நரைன் மிஸ்ரா கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில், விடுதியில் தோட்டக்காரா்களாகப் பணியாற்ற 3 நாள்களுக்கு முன்பு அவா்கள் வளாகத்திற்குள் வந்தது தெரியவந்தது. அவா்களுடன் மூன்றாவது ஒருவா் இருந்ததாகவும், மூவரும் ஒரே அறையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு அவா்கள் மூவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை அந்த மூன்றாவது நபா் மட்டும் வளாகத்தை விட்டு வெளியேறுவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனா். இது தொடா்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறை கூடுதல் ஆணையா் தெரிவித்தாா்.