முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் (கோப்புப்படம்)
பகிர்:

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நந்துதிஹ் கிராமத்தில் நடந்துள்ளது.

Advertisement

பலியானவர்கள் சரஸ்வதி தேவி (36), அவரது 17 வயது மகன் மற்றும் அவரது உறவினர் முண்டிர்கா தேவி (78) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சத்கவான் மண்டல அதிகாரி கேசவ் பிரசாத் சௌத்ரி கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ. 50,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தலா ரூ. 4 லட்சம் முழு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

summary

Three persons of a family were killed in a lightning strike in Jharkhand's Koderma district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.