ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு
ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரம் மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் 3 சிறார்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளிக்கிழமை சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். குழந்தைகள் வீட்டிற்குள்ளேயும் அவர்களின் தந்தை அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் கூறுகையில், அந்தக் குடும்பத்தினர் வியாழக்கிழமை இரவு தூங்கச் சென்றிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை சந்தேகம் அடைந்த குழந்தைகளின் பாட்டி, அவர்களைச் சென்று பார்த்தபோது அவர்கள் அசைவற்ற நிலையில் இருப்பதைக் கண்டிருக்கிறார்.
Advertisement
Advertisement
மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை தற்கொலைக் குறிப்போ அல்லது வேறு எந்தப் பொருட்களோ கண்டெடுக்கப்படவில்லை. குடும்பப் பிரச்னைகள் இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபரின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். குடும்பத்திற்குச் சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லாததால், சொத்துத் தகராறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
Four members of a family, three of them minors, were found dead in Prakasam district on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.