முகப்பு
இந்தியா

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி...

Updated On : 10 மே 2026, 3:24 am IST
ஒடிஸா மாநிலத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை செலுத்தப்பட்ட நவீன ‘எம்ஐஆா்வி’ ஏவுகணை.
பகிர்:

ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்ஐஆா்வி தொழில்நுட்பம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அக்னி ஏவுகணை, ஒடிஸா கடல் பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட வெவ்வேறு இலக்குகளை நோக்கி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், நாட்டின் ராணுவ தற்காப்புத் திறன் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments