முகப்பு
இந்தியா

ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

ம.பி.யில் நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகு.
பகிர்:

ம.பி.யில் நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சுற்றுலாத் துறையினால் இயக்கப்பட்டு வந்த சுற்றுலாப் படகு, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பர்கி அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்.

Advertisement

Advertisement

மேலும் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் படகு விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மத்தியப் பிரதேச அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் திவேதி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

summary

The Madhya Pradesh government has constituted a one-member judicial commission to conduct a probe into a cruise boat accident in the Bargi Dam that claimed 13 lives, a senior official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments