எட்டு மாதக் குழந்தையின் வாயில் அமிலத்தை ஊற்றிய தாய்!
ராஜஸ்தானில் 8 மாதக் குழந்தையின் வாயில் பெற்ற தாயே அமிலம் ஊற்றிய நிலையில் குழந்தை உயிருக்குப் போராடி வருகின்றது.
ராஜஸ்தானில் 8 மாதக் குழந்தையின் வாயில் பெற்ற தாயே அமிலம் ஊற்றிய நிலையில் குழந்தை உயிருக்குப் போராடி வருகின்றது.
ராஜஸ்தானில் உள்ள பிவாதி பகுதியைச் சேர்ந்தவர் மோஹித். இவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று (மே 18) அவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் குழந்தையுடன் தனியே இருந்த அவரது மனைவி, வற்புறுத்தி குழந்தையின் வாயில் அமிலத்தை ஊற்றியுள்ளார்.
Advertisement
Advertisement
இதனால் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்துள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் சிலர் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். குழந்தை தற்போது மருத்துவமனை செயற்கை சுவாசக் கருவியுடன் உயிருக்குப் போராடி வரும் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை துணை ஆய்வாளர் விசாரணை நடத்த மருத்துவமனைக்குச் சென்றார். அவரிடம் பேசிய குழந்தையின் தந்தை, தனது மனைவி வேண்டுமென்றே குழந்தையின் வாயில் அமிலத்தை ஊற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Mother Pours Acid into Eight-Month-Old Baby's Mouth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.