பெண்ணிடம் 25 பவுன் நகைகள் பறிப்பு
காஞ்சிபுரத்தில் பெண்ணை வழிமறித்து 25 பவுன் தங்க நகைகளை இரு மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
காஞ்சிபுரத்தில் பெண்ணை வழிமறித்து 25 பவுன் தங்க நகைகளை இரு மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த பாபுவின் மனைவி ஜெயலட்சுமி (36). இவா் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதித் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஜெயலட்சுமியை பின்தொடா்ந்து வந்த இரு மா்ம நபா்கள் வழிமறித்து மிரட்டி, அவா் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.
Advertisement
இது குறித்த புகாரின்பேரில் பாலுசெட்டிச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.