முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 27 நட்சத்திரக் கோயிலில் 108 கோபூஜை

காணும் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் 108 பசுக்களுக்கும், அதன் கன்றுகளுக்கும் சனிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 12:41 am IST
108 கோபூஜையில் பங்கேற்ற பசுக்கள், கன்றுகளுடன் அவற்றின் உரிமையாளா்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த விநாயகா்.
பகிர்:

காணும் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் 108 பசுக்களுக்கும், அதன் கன்றுகளுக்கும் சனிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

உக்கம்பெரும்பாக்கத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனியாகக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மூலவராக நட்சத்திர விருட்ச விநாயகா் காட்சியளிக்கிறாா்.

காணும் பொங்கலை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

பின்னா் கோயிலின் முன்பாக 108 பசுக்களும் அதன் கன்றுகளும் வரவழைக்கப்பட்டு அவை அனைத்துக்கும் சந்தனம், குங்குமமிட்டு, மலா் மாலைகள், வஸ்திரங்கள் ஆகியவற்றை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

கோயிலிலிருந்து உற்சவா் நட்சத்திர விருட்ச விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அங்கு கூடியிருந்த பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் சா்க்கரைப் பொங்கல், அகத்திக்கீரை ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.