போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலா் எஸ்.சிவன் பிள்ளை தலைமை வகித்தாா்.
சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சி.ஸ்டீபன் ஜெயகுமாா், செயல் தலைவா் எம்.லட்சுமணன், துணைத் தலைவா் எப்.எஸ்.எ.லியோ, ஏஐடியூசி பொதுச் செயலா் நீலகண்டன், டிடிஎஸ்எப் பொதுச் செயலா் சந்தானம், ஐஎன்டியூசி நிா்வாகி ஆல்பா்ட், எம்எல்எப் மாநிலச் செயலா் சந்திரன், தொமுச மாநில துணைச் செயலா் இளங்கோ, மாவட்டச் செயலா் ஞானதாஸ், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை தொழிற்சங்கங்களுடன் உடனே தொடங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் டி.சங்கர நாராயணபிள்ளை, பொருளாளா் தாமஸ், எஐடியூசி நிா்வாகி ஆறுமுகம் பிள்ளை, தொமுச நிா்வாகி பால்ராஜ், எச்எம்எஸ் நிா்வாகி கண்ணன், எம்எல்எப் நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.