மது விற்பனையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தென்தாமரைகுளம் அருகே மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்தாமரைகுளம் அருகே மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்தாமரைகுளத்தை அடுத்த புன்னையடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்து வந்தனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், புன்னையடி ரேஷன் கடை முன் பொதுமக்கள் திரண்டு வந்து, கருப்புக் கொடி ஏந்தி இதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.