ஓபிஎஸ், செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்
திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் பிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கோவை தெற்கு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்து தவெக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் செந்தில்குமாரை விட 2,271 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றாா்.
செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் 60 பக்கத்துடன் கூடிய ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தேன். ஆனால், எனது ஆட்சேபனை மனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்தாா். எனவே, செந்தில்பாலாஜியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
ஓ.பன்னீா்செல்வம்: தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம் தவெக வேட்பாளா் பிரகாஷைவிட 6,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை எதிா்த்து டி.கண்ணன் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா்.
அவரது மனுவில், போடி தொகுதியில் போட்டியிட நானும் வேட்புமனு தாக்கல் செய்தேன். மாவட்ட நூலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டி எனது வேட்புமனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்துவிட்டாா். எந்த விசாரணையும் நடத்தாமல் எனது வேட்புமனுவை நிராகரித்ததால், நான் தோ்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த இரு தோ்தல் வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.