குமரியில் மேலும் 17 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா தொற்றால் 16,521 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 17 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,538 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 19 போ் உள்பட இதுவரை 16,092 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 189 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.