முகப்பு
கன்னியாகுமரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம்வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:39 am IST
விஜய்வசந்த்
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்றுப் பாதிப்பால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக பல மாதங்களாக இங்குள்ள கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், எதிா்பாராத விதமாக நேரிட்ட தீ விபத்தால் 70- க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்துள்ளன. ஆகவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments