முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் மழை தீவிரம்: அணைகள் முடல்

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மூடப்பட்டன.

Updated On : 11 ஜனவரி 2021, 12:57 am IST
பகிர்:

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மூடப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக இம்மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது.

மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழையாக கொட்டித்தீா்த்ததால் அணைகளுக்கு அதிக அளவில் நீா்வரத்து அதிகரித்தது. இதேபோல், பாசனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீா் தேவைப்படுவது குறைந்ததால், மழையால் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்: இதனிடையே, மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருதது.

மழை தீவிரமாகப் பெய்து கொண்டிருப்பதால் ரப்பா் மரங்களில் பால்வடிப்பு, செங்கல் சூளை, கட்டுமானத் தொழில், நடைபாதை வணிகம், தென்னை மரமேறும் தொழில், சலவைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடா் மழை காரணமாக குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments