கிண்டலடிக்கப்பட்ட தோற்றம்... பதிலடி கொடுத்த நடிகர் சக்தி வாசு!
நடிகர் சக்தியின் பதிவு கவனம் பெற்றுள்ளது...
நடிகர் சக்தியின் தோற்றம் சமூக வலைதளங்களில் கிண்டலான நிலையில் அவர் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பி. வாசுவின் மகனான நடிகர் சக்தி சினிமாவில் அறிமுகமான காலங்களில் கதையம்சமுள்ள படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். முக்கியமாக, தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்கள் சக்திக்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தன.
ஆனால், மெல்ல மெல்ல சினிமாவிலிருந்து அவருக்கான வாய்ப்புகள் குறைய, நடிப்பதையும் நிறுத்தினார். பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். தற்போது, நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, சக்தி நடித்த அனலி என்கிற திரைப்படத்தின் பாடல் ஒன்றில் அவருடைய ஆடையும் தோற்றமும் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்ததால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகர் சக்தி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இது கராத்தே பாபு படத்திற்காக. நீங்கள் விரைவிலேயே என்னை இப்படிப் பார்க்கப் போகிறீர்கள். நான் உடற்பயிற்சி செய்யும்போது என்னுடைய மனதின் சக்தி அதிகரிக்கிறது. யாரெல்லாம் என்னைக் கொந்தளிக்கச் செய்தார்களோ அவர்களுக்கு நன்றி. இது எனக்கு புதிதில்லை. போதுமான அளவு பார்த்துவிட்டேன். உண்மையில், இது என்னை ஊக்கப்படுத்துகிறது. டிரிகருக்கே (trigger) டிரிகர் கண்டுபிடிச்சவன் நான்தான். யாரையும் காயப்படுத்தவில்லை. நீங்கள் விரைவிலேயே என்னைச் சந்திப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் அடுத்த திரைப்படத்தில் தன்னைச் சந்திக்கலாம் என்ற சக்தியின் பதிவிற்கு நடிகர் அஜ்மல் வாழ்த்துகளைச் சொல்லி பாராட்டியுள்ளார்.
Actor Sakthi has released a new post amidst the mockery on social media regarding his appearance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.