FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உங்க விருப்பத்துக்கு... தொகுப்பாளரால் கோபமடைந்த சூரி! ஏன்?

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூரியின் விடியோ....

11 அக்டோபர் 2026, 12:04 pm IST
நடிகர் சூரி
பகிர்:

தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் நடிகர் சூரி கோபமடைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி மண்டாடி திரைப்படத்திற்குப் பின் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக வளர்ந்துள்ளார். சூரியின் மீதான நகைச்சுவை முகங்கள் மாறி தற்போது முன்னணி நாயகன் என்கிற பிம்பம் பரவலாக நிலைத்திருப்பதால் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மண்டாடி திரைப்படம் தமிழகத்திலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் சூரியின் அடுத்தடுத்த திரைப்படங்களின் வணிகமும் உயர உள்ளது. இதனால், சூரியின் சம்பளமும் ரூ. 30 கோடிக்கு அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

மேலும், பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சூரியின் திரைப்படங்களைத் தயாரிக்க ஆர்வம்காட்டி வருகின்றன. ரூ. 100 கோடிக்கான பட்ஜெட் திரைப்படத்திலும் விரைவில் சூரி இடம்பிடிப்பார் என்றே சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூரியிடம் தொகுப்பாளர்கள் அட்டையில் ஒரு பெயரை எழுதிக் கொடுத்தனர். அவர் மேடையில் நின்றபோது, அதில் யார் பெயர் எழுதியிருக்கிறது? எனத் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சூரி, “நீங்கள் யார் பெயரை எழுதிக்கொடுத்தீர்களோ அவர் பெயர்தான் இருக்கிறது” என்றார். மேலும், தொகுப்பாளர் ”படத்திலிருந்து ஹீரோவை கூப்பிட போகிறார்களா? இல்லை, இயக்குநரையா?” எனக் கேட்டார்.

சூரி, ”நீங்கள் விருப்பப்படும் ஆளைக் கூப்பிட முடியாது. கூப்பிடும்போது யாரெனத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றார். ஏன் திடீரென சூரி கோபமாகப் பதிலளித்தார் என சமூக வலைதளங்களில் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில், சிலர் சூரிக்குப் படிக்கத் தெரியாது என்பதைக் குத்திக்காட்டுவது போல் தொகுப்பாளர் கேட்டதுதான் பிரச்னை என ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

A video of actor Soori getting angry at a question asked by the host is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments