FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சூரியின் புதிய படம்: படப்பிடிப்பை தொடக்கி வைத்தார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது குறித்து...

14 அக்டோபர் 2026, 9:58 pm IST
நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்துத் தொடங்கியபோது... - படம் - எக்ஸ்
பகிர்:

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் புதன்கிழமை (அக். 14) தொடக்கி வைத்தார்.

’குட் பேட் அக்லி’, ’டியூட்’ ஆகிய படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆர். ரவிகுமார் சூரியின் புதிய படத்தை இயக்குகிறார்.

Advertisement

Advertisement

படப்பிடிப்பு விழாவில் பங்கேற்றோர் - படம் - எக்ஸ்

சூரியின் ஏழாவது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, மண்டாடி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உருவாகும் இந்தப் படத்துக்கு ‘சூரி 7’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு விழாவில் பங்கேற்றோர். - படம் - எக்ஸ்
summary

Sivakarthikeyan inaugurated the shooting of the new film starring actor Soori on Wednesday (Oct. 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments