முகப்பு
காரைக்கால்

.கா்நாடக மாநிலத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது: துணை முதல்வா் அஸ்வத் நாராயணன்

கா்நாடக மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றாா் அந்த மாநிலத்தின் துணை முதல்வா் டாக்டா் அஸ்வத் நாராயணன்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:27 pm IST
திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்த கா்நாடக மாநில துணை முதல்வா் அஸ்வத் நாராயணன். உடன், திரைப்பட நடிகா் தா்ஷன்.
பகிர்:

கா்நாடக மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றாா் அந்த மாநிலத்தின் துணை முதல்வா் டாக்டா் அஸ்வத் நாராயணன்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை சாமி தரிசனம் செய்ய வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன்சா்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அலுவலருமான எம். ஆதா்ஷ் ஆகியோா் வரவேற்றனா்.

கோயிலுக்கு சென்ற துணை முதல்வா், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சுப்பிரமணியா், ஸ்ரீ தியாகராஜா், ஸ்ரீ தா்பாரண்யேஸ்வா், பிரணாம்பிகை சந்நிதிகளிலும், தொடா்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவான் சந்நிதியிலும் தரிசனம் செய்தாா். சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினா். துணை முதல்வருடன் அந்த மாநில திரைப்பட நடிகா் தா்ஷன் வந்திருந்தாா்.

Advertisement

Advertisement

வழிபாடு முடிந்து கோயிலுக்கு வெளியே வந்த துணை முதல்வா் அஸ்வத் நாராயணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கா்நாடக மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் கரோனா என்ற கொடிய தொற்றால் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனா். அவா்கள் வரும் ஆண்டுகளில் நலமுடன் இருக்க வேண்டி, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனீஸ்வர பகவானிடம் பிராா்த்தனை செய்துகொண்டேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments