முகப்பு
இந்தியா

ம.பி.: மொஹரம் ஊர்வலத்தின் போது மின்சார கம்பியில் தாஜியா உரசியதில் 3 பேர் பலி, 10 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் மொஹரம் ஊர்வலத்தின் போது மின்சார கம்பியில் தாஜியா உரசியதில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 26 ஜூன் 2026, 9:54 pm IST
பகிர்:

மத்திய பிரதேசத்தில் மொஹரம் ஊர்வலத்தின் போது மின்சார கம்பியில் தாஜியா உரசியதில் 3 பேர் பலியாகினர்.

மத்திய பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தில் மொஹரம் ஊர்வலத்தின் போது, தாஜியா உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 3 பேர் பலியானதோடு 10 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவு ஹத்னாரா கிராமத்தில் நடந்துள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.

நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஊர்வலம் மேவாதி மொஹல்லா வழியாகச் சென்றபோது, தாஜியா மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதனால் அதைச் சுமந்து சென்றவர்கள் மின்சாரம் பாய்ந்து தரையில் விழுந்தனர். அருகில் இருந்த மற்றவர்களும் பாதிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

அதிகாரிகள் கூறுகையில், மத்திய பிரதேச மேற்கு மண்டல மின் விநியோக நிறுவனம் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கடமை தவறியதாக ஊழியர் கன்ஷ்யாம் கிர் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு தொழிலாளர்களையும் மின்சார நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் தெரிவிக்கையில், இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் பலியாகினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

summary

Three persons were killed and 10 others injured after a tazia came in contact with a high-tension power line during a Muharram procession in Ratlam district of Madhya Pradesh, officials said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments