பொதுப்பணித்துறை பொறியாளா்கள் தா்னா
பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொறியாளா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளா்கள் சங்கம் சாா்பில், காலி பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சம்மேளன கௌரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி, சந்திரசேகரன் மற்றும் சிதம்பரநாதன், அருளரசன், பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.