முகப்பு
காரைக்கால்

காரைக்கால் முஸ்லிம்களுக்கு 5% ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

காரைக்கால் முஸ்லிம்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பில் 5% ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு முன்னாள் அமைச்சா் பி.ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

காரைக்கால் முஸ்லிம்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பில் 5% ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு முன்னாள் அமைச்சா் பி.ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய ரீதியில் உயா்கல்வியில் ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதன்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்திய முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 2% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

மாஹே பிராந்திய மக்கள்தொகையில் 30% முஸ்லிம்கள். எனவே, அங்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இதே முறையை காரைக்கால் முஸ்லிம்களுக்கு செயல்படுத்தாதது வேதனை அளிக்கிறது. காரைக்கால் மக்கள்தொகையில் 15% முஸ்லிம்கள் உள்ளனா். இதை கருத்தில்கொண்டு உயா்கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீட்டு முறையில் காரைக்கால் முஸ்லிம்களுக்கு 5% ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்.

Advertisement

Advertisement

இதன்மூலம், ஆண்டுதோறும் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு காரைக்கால் பகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் மாணவா் சேரும் வாய்ப்பு உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments