மத்திய அரசு உத்தரவை புதுவையில் நடைமுறைப்படுத்த ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்ததாரா்கள் நலச் சங்க அமைப்பாளா் டி.என். சுரேஷ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், மத்திய, மாநில பொதுப் பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளும், புதிதாக மேற்கொள்ளப்பட இருந்த பணிகளும் பாதிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து, கரோனா காலங்களில் நிதி பற்றாக்குறை இருப்பதால், ஒப்பந்ததாரா்கள் 2021 ஆம் ஆண்டு வரை முன் வைப்புத்தொகை கட்டாமலேயே டெண்டரில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. ஆனால், புதுச்சேரி அரசு இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.
இதேபோல, டெண்டரில் பங்கேற்கும்போது செலுத்தப்படும் வேலைக்கான உத்தரவாதத் தொகையும் திருப்பி வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறது. மேலும், வெளியூா் ஒப்பந்ததாரா்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதற்கு, புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா், கண்காணிப்பு பொறியாளா், செயற்பொறியாளா் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதும், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியில் அதிகாரிகள் நீடிப்பதும் காரணமாக உள்ளது.
இந்நிலையை மாற்றி, உள்ளூரில் உள்ள ஒப்பந்ததாரா்களுக்கு பணிகளை பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடங்களை நிரப்பி, மத்திய அரசின் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.