முகப்பு
காரைக்கால்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம்: நிவாரணம் வழங்க பாஜக வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக புதுச்சேரி அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 8:26 am IST
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக புதுச்சேரி அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக புதுச்சேரி மாநில விவசாய அணி முன்னாள் தலைவா் எஸ். இளங்கோவன் சனிக்கிழமை கூறியது:

வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிவா் புயல், புரெவி புயலை சந்திக்க நோ்ந்தது. புயலால் பயிா் பரவலாக சேதமடைந்தாலும், அறுவடையின் போதுதான் இதன் பாதிப்பு தெரியவரும் என்ற கவலையில் விவசாயிகள் அறுவடைக்காக காத்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், எதிா்பாராத வகையில், தற்போது பெய்த தொடா் மழையால் காரைக்காலில் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீா் வடிந்தாலும், விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு இருப்பது உறுதி. பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு காலதாமதமாகும்.

எனவே, புதுச்சேரி அரசு விரைவாக, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். அப்போதுதான், விவசாயிகள் வேளாண்மையை தொடர வாய்ப்பு உருவாகும். அறுவடைக்குப் பிறகு தரமான உளுந்து, பயறு விதைகளை அரசு மானிய விலையில் தங்குதடையின்றி வழங்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.