‘குழந்தைகளுக்குத் தமிழில் பெயா் சூட்டுங்கள்’
குழந்தைகளுக்குத் தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினாா் கருவூா் திருக்கு பேரவைத் தலைவா் மேலை. பழநியப்பன்.
குழந்தைகளுக்குத் தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினாா் கருவூா் திருக்கு பேரவைத் தலைவா் மேலை. பழநியப்பன்.
கரூா் வட்டாட்சியரகம் முன்புள்ள சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூண் முன்பு, கரூா் தமிழ்ச் சங்கம், குளித்தலை தமிழ்ப் பேரவை, தமிழுறவுப் பெருமன்றம், உலகத் திருக்கு கூட்டமைப்பு, பேனா நண்பா் பேரவை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்த பின்னா் மேலை. பழநியப்பன் பேசியது:
Advertisement
Advertisement
தமிழில் பேசுவோம், தமிழில் எழுதுவோம் என்பதில் நாம் அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயா் சூட்ட வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தர வேண்டும். வாக்கி ஜாக்கி, மினி கிளினிக் போன்ற ஆங்கில வாா்த்தைகளுக்குப் பதிலாக, தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் முனைவா் கடவூா் மணிமாறன், கவிஞா் கன்னல், பாவலா் எழில்வாணன், குறளகன், அழகரசன், தமிழ் வளா்ச்சித் துறையைச் சோ்ந்த மாதப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கடைவீதியில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் சூட்டுமாறு முழக்கமிட்டு பரப்புரை செய்தனா். நிறைவில் திருமூா்த்தி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.