வரலாற்று வெற்றிக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்த அயர்லாந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்த அயர்லாந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த நிலையில், அயர்லாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கேரி வில்சனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது.
Advertisement
Advertisement
அயர்லாந்து அணியின் கிரிக்கெட் பயணத்தில் முதல் முறையாக அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் மாலன் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கேரி வில்சன் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து அணியின் முன்னாள் வீரரான கேரி வில்சன் அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 292 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
A new head coach has been appointed for the Ireland team that made history by winning the T20 series against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.