ஆடுகளத்தில் தலைவனாக இருந்திருக்கிறேன்... பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்!
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் ஜினடின் ஜிடான் பேட்டி குறித்து...
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் ஜினடின் ஜிடான் தான் அளித்த பேட்டியில், “அளவற்ற மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அதே நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரும் லெஜெண்டரி வீரருமாகக் கருதப்படும் ஜினடின் ஜிடான் (54 வயது) இன்று (ஜூலை 28) பதவியேற்றார்.
பிரான்ஸ் அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக இருந்த ஜிடான் மிகவும் புகழ்பெற்ற வீரராக இருந்தார். தனது ஓய்வுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.
Advertisement
Advertisement
ரியல் மாட்ரிட் அணி ஜிடான் தலைமையில் 3 சாம்பியன்ஷிப் லீக், 2 கிளப் உலகக் கோப்பையை வென்றது. மிகப்பெரிய தொகைக்கு அமெரிக்க அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்துவிட்டார்.
பிரான்ஸ் அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. கிளப் போட்டிகளில் தலைமை ஏற்பதில் இருந்து விலகி இருந்தேன். ஆனால், பிரான்ஸ் அணிக்காக எல்லாவற்றையும் மாற்றினேன்.
பிரான்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வேண்டுமென நினைத்தேன். இது மிகவும் அளவற்ற மகிழ்ச்சி. எனக்குப் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. நான் சவாலுக்குத் தயாராக இருக்கிறேன். அதுதான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. என்னைப் பொருத்தவரை தொடர்ச்சிதான் கனவு.
பிரான்ஸ் அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. என்னால் முடிந்த அத்தனையும் தரவிருக்கிறேன். அப்போதுதான் அணி வெல்ல முடியும். கடந்த அற்புதமான ஆண்டுகளுக்கு தேஷாம்பிற்கு வாழ்த்துகள். இந்த ஆட்டத்தில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், நான் நம்.10ல் விளையாடி இருக்கிறேன். எனக்கு கோல்கள் பிடிக்கும். ஆடுகளத்தில் தலைவனாக இருந்திருக்கிறேன். தற்போது அனுபவத்தின் மூலமாக தலைவனாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
France new coach Zidane called it an immense joy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.